Categories: Cinema News latest news

அவங்க அவ்வளோ தரலை.. நீங்களும் இவ்வளோ தர கூடாது… சம்பளத்தை குறைத்த ரஜினிகாந்த்…

Rajinikanth: பொதுவாக ஒரு நடிகர் சம்பளம் குறித்து பேசும்போது ஒருவரை விட இன்னொருவரிடம் அதிகமாக வாங்குவதே இன்றளவும் கோலிவுட் வழக்கமாக இருக்கிறது. ஆனால் இதில் ரொம்பவே வித்தியாசமான ஒரு நடிகராக இருந்திருக்கிறார். அப்படி அவர் செய்த ஆச்சரிய சம்பவம் குறித்த முக்கிய தகவல்.

தற்போதைய நடிகர்கள் எல்லாம் சம்பளத்தினையே முதல் பேச்சாக பேசுவதையே வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்துக்கு கால்ஷூட் கொடுத்து அதை தொடங்கும் சில நாளுக்கு முன்னர் தான் அட்வான்ஸ் பணத்தையே வாங்குவாராம்.

அப்படி ஒருமுறை வில்லனாக இருந்து ரஜினிகாந்த் நடிகராக வளர்ந்து வந்து கொண்டு இருந்த காலம் அது. அவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்த நேரம் ஏவிஎம் நிறுவனத்தில் படம் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். நேராக ஏவிஎம் சரவணனை பார்த்து தன் ஆசையை கூறுகிறார்.

சம்பளம் குறித்த கேள்வி எழும்போது நீங்கள் என்னை நடிக்க அழைக்கும் போது என்னுடைய மார்க்கெட் வைத்து தொகையை முடிவு செய்துக் கொள்ளலாம். இப்போது இருப்பதை விட அப்போ குறைந்து இருந்தால் குறைத்து விடுங்கள். அதிகமாக இருந்தால் அதிகமாக கொடுங்கள் என்றாராம்.

அப்போதே ரஜினியின் மீது அளவுக்கடந்த நம்பிக்கை வைத்தாராம் ஏவிஎம் சரவணன். ஒருநாள் மனிதன் படத்தில் நடிக்க டேட் கேட்டு அவரை சந்திக்கிறார். ரஜினி தன் சம்பளமாக ஒரு தொகையை சொல்ல அது நியாயமாக தோன்ற உடனே ஓகே சொல்லிவிட்டார். சரியென ரஜினியும் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டாராம்.

பின்னர் சில நாட்கள் கழித்து சரவணனை சந்தித்த ரஜினிகாந்த் நான் உங்களிடம் சொன்ன சம்பளத்தினை இன்னும் இரண்டு நிறுவனத்தில் சொன்னேன். அவர்கள் ஒப்புக்கொள்ளவே இல்லை. குறைத்து தான் ஓகே சொன்னார்கள். நீங்களும் அந்த குறைத்த தொகையையே சம்பளமாக கொடுங்கள் போதும் என்றாராம். இது ஏவிஎம் சரவணைனையே ஆச்சரியப்படுத்தி விட்டதாம்.

Published by
Shamily