ரஜினி போட்ட கண்டிஷன் - கையை பிசையும் அண்ணாத்தே படக்குழு...
Fri, 18 Dec 2020

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்தே. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன், குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இதற்கிடையில் ரஜினி ஜனவரியில் அரசியல் கட்சியை துவங்கவுள்ளார். எனவே, அதற்கான வேலைகள் இருப்பதால்,ஜனவரி 10ம் தேதிக்குள் நான் டப்பிங் பேசும் அளவுக்கு படத்தை முடித்துக்கொடுங்கள். எவ்வளவு வேகமாக வேண்டுமானாலும் படத்தை எடுங்கள். நான் நடித்துக் கொடுக்கிறேன் என இயக்குனர் சிவாவிடம் ரஜினி கூறியுள்ளாராம்.