தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில் எப்படியாது ரசிகர்களுக்கு பிடித்த படம் ஒன்றை கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் ரஜினி. அப்படி கணக்கு போட்டுதான் சிவாவை அழைத்து அண்ணாத்த படத்தை கொடுத்தார். ஆனால், அப்படம் பலருக்கும் பிடிக்கவில்லை.
அண்ணாத்த படத்திற்கு பின் அவர் யாரின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்பாராஜ், பாலிவுட் பட இயக்குனர் பால்கி என பலரின் பெயர்களும் அடிபட்டது. இதில், பால்கியை ரஜினிக்கு ரெக்கமண்ட் செய்தவர் அவரின் முன்னாள் மருகன் தனுஷ் ஆவார்.
பால்கி பாலிவுட்டில் சீனி கம், ஷமிதாப் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் தனுஷ் நடித்திருந்தனர். பால்கிக்கு தமிழ் சினிமா மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவர் இயக்கிய எல்லா படத்திற்கும் இளையராஜா இசையமைப்பார். இவரைத்தான் ரஜினிக்கு பரிந்துரைத்தார் தனுஷ். ஆனால், பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனை தேர்ந்தெடுத்துள்ளார் ரஜினி.
சமீபத்தில் தனுஷ் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். இதில், மன வருத்தத்தில் இருக்கும் ரஜினி அவர் ரெக்கமண்ட் செய்த பால்கியை நிராகரித்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது தனுஷை அப்செட் ஆக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 169வது படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பது சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…