தற்போது தான் ஹீரோவின் வயது வெளிப்படையாக அனைவருக்கும்இணையதளம் மூலம் தெரிந்துவிடுகிறது. அதனால் தற்போதுள்ள ஹீரோக்கள், இளம் ஹீரோயின் உடன் ஜோடி சேர்ந்து நடிப்பதை தவிர்த்து தன்னுடைய வயதுக்கேற்றவாறு தான் நடிகைகள் உடன் தான் ஜோடி சேர்கிறார்கள்.
ஆனால் 90’s 80’s அந்த காலங்களில் அப்படி கிடையாது. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, பின்னாளில் அவருக்கு ஜோடியாக நடித்த சம்பவத்தை எல்லாம் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த திரைப்படங்களையும் பார்த்திருக்கிறோம். அப்படி பல சம்பவங்கள் சினிமாவில் அரங்கேறியுள்ளன.
அப்படி ஒன்று தான் ஹீரோ வயதை விட குறைவான முதிர்ச்சி தோற்றமுள்ள பெண், ஹீரோவுக்கு அம்மாவாக நடிப்பார். இது பல திரைப்படங்களில் நடந்துள்ளது. பெரும்பாலும் ரஜினி படங்களில் இது நடந்துள்ளது.
இதுபற்றி பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்திருந்த சத்யபிரியா கூறுகையில், பொதுவாக கதாநாயகர்கள் தன்னைவிட குறைந்த வயது உள்ள பெண்ணை தான் அம்மாவாக நடிக்க விருப்பப்படுவார்களாம்.
ஏனென்றால், அப்போதுதான் ரசிகர்கள் திரையில் பார்க்கும்போது, அந்த பெண்ணை விட ரஜினி ஹீரோ வயது குறைவானவர் போல, அதனால் தான் அந்த பெண் அம்மா வேடத்தில் நடிக்கிறார்கள் என நினைப்பார்களாம். ஹீரோ எப்போதும் இளமையானவராக ரசிகர்களுக்கு தெரிவார்.
இதையும் படியுங்களேன் – இயக்குனர் பாக்யராஜை திட்டம் போட்டு பழிவாங்கிய பார்த்திபன்.! அது எவளோ பெரிய வாய்ப்ப.!
ஒருவேளை அப்படி கூட இருக்கலாம். அதனால் தான் என்னவோ ரஜினி நடித்த பணக்காரன் படத்தில் அவருக்கு சித்தியாக நடித்திருந்தேன். அடுத்தது பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிக்கு அம்மாவாக நடித்து இருந்தேன் என வெளிப்படையாக பேசி இருந்தார்.
அண்மையில் கூட ரஜினி ஹீரோவாக நடித்து வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு பாட்டியாக நடித்திருந்த அந்த பெண்ணிற்கு வயது ரஜினியை விட குறைவாம். இந்த தகவல் வெளியானது எப்படி நடித்து இருந்தாலும் ரஜினி ரஜினி தான் அவர்களை ரசிக்கத்தான் போகிறோம்
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…