நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தயாராகும் புதிய படம் ஜெய்லர். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஐதராபாத்தில் நடக்க இருக்கிறதாம். ஏற்கெனவே இந்த படத்தில் பிரியங்கா மோகன், சிவராஜ் குமார் நடிப்பதாக தகவல் வெளியானது.
இன்னும் மற்றுமொரு புதிய அப்டேட்ஸ்கள் வந்தன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா மற்றும் இன்னொரு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ரம்யாகிருஷ்ணன் ரஜினி கூட்டணியில் படையப்பா படம் மாபெரும் வெற்றி பெற்றது. அந்த படத்தில் கடைசி க்ளைமாக்ஸ் காட்சியிலும் கூட நீலாம்பரியாக வந்த ரம்யா கிருஷ்ணன் அடுத்த ஜென்மத்துலயும் உன்னை விட மாட்டேன் என்று கூறி இறந்து விடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.
அதை நியாபகப்படுத்தும் விதமாக ஜெய்லர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீண்டும் களமிறங்குகிறார் ரம்யா கிருஷ்ணன். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எல்லாருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா நெல்சன் என்பது தான் சந்தேகமே. பொறுத்திருந்து தான் பார்ப்போம்.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…