Categories: Cinema News latest news

இந்த போஸ் எப்படி இருக்கு? வெளியான ரஜினியின் நியூ லுக்.. பக்கத்துல யார் நிக்குறாங்கனு பாருங்க

Actor Rajini: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தன்னுடைய அந்தஸ்தை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் அதே ஒரு மார்க்கெட் லெவலுடன் இன்று வரை ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இன்றைய இளம் தலைமுறை நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் 73 வயதை கடந்தாலும் இவர்தான் இன்று நம்பர் ஒன் நடிகராக திகழ்ந்து வருகிறார். எத்தனையோ புதுமுக நடிகர்கள் வந்தாலும் ரஜினியின் படங்களுக்கு தான் அமோக வரவேற்பு இருந்து வருகிறது.

இவருடைய படங்களுக்கு தான் நல்ல ஒரு ஓப்பனிங்கும் இருந்து வருகிறது. அவருடைய ஸ்டைல் அவருடைய நடிப்பு அவருடைய வேகம் என எல்லாமே இவருடைய இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்து வருகிறது. தற்போது ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சிவாஜி படத்தை ரீமேக் செய்து கையை சுட்டுக்கொண்ட துயரம்… அட தயாரிப்பாளர் அந்த நடிகரா?..

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான வேலைகளில் தான் இப்போது பிசியாக இருந்து வருகிறார். இதன் முதல் கட்ட வேலையாக ரஜினிக்கு லுக் டெஸ்ட் பணி நடந்து வருகிறது.

அது சம்பந்தமான புகைப்படம் தான் இப்பொழுது வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தில் ரஜினி ஒரு கண்ணாடி முன் உட்காருவது மாதிரியும் அவருக்கு பின்னால் லோகேஷ் கனகராஜ் ரஜினியை மொபைலில் போட்டோ எடுப்பது மாதிரியும் அந்த புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

இதையும் படிங்க: அஜித் அப்படி செய்வார் என எதிர்பார்க்கவே இல்ல!.. நெகிழும் கிரிக்கெட் வீரர் நடராஜன்!..

இந்த புகைப்படத்தில் ரஜினி காலா படத்தில் இருக்கும் லுக்கில் இருப்பதைப் போல தெரிகிறார். இதை பார்த்த ரசிகர்கள் வாவ் கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

coolie

படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்தது. டைட்டில் டீசரே இந்த அளவுக்கு சிறப்பாக வந்திருக்கிறது என்றால் படம் பெரிய அளவில் பேசப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கோட் படத்துக்கு வேட்டு வச்ச அஜித்!.. டீலில் விட்ட நெட்பிளிக்ஸ்!.. ஐயோ பாவம்!…

 

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini