ரஜினிதான் ஆல் டைம் ரெக்கார்ட்!. வசூலை வாரி குவிக்கும் ஜெயிலர் 2..

ஜெயில்2 வசூல் - ரஜினி செய்த சாதனை
 
jailer2


70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி தொடக்கத்தில் ஹீரோவின் நண்பன், வில்லன் என்றெல்லாம் நடித்துவிட்டு ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறி வசூலை கொடுக்கும் படங்களில் நடித்தவர் ரஜினி. தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்ததால் இவருக்கு சூப்பர் ஸ்டார் என்கிற பட்டமும் கிடைத்தது.

ரஜினி சினிமாவுக்கு வந்து 50 வருடங்களாகியும் அவரின் சூப்பர்ஸ்டார் பட்டத்தை யாராலும் பறிக்க முடியவில்லை என்பதுதான் அவர் செய்த சாதனை. இடையில் விஜய்தான் சூப்பர்ஸ்டார் என சிலர் பேசினாலும் ரஜினி படங்களின் வசூலை விஜய் படம் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை..

தமிழ் சினிமாவில் படம் வெளியாகி முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் ரஜினியின் கூலி திரைப்படம்தான். இந்த படம் 151 கோடி வசூல் செய்தது. விஜயின் லியோ திரைப்படம் 142 கோடி வசூல் செய்து இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதேபோல், கடந்த 15ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் முதல் நாளிலிருந்து நல்ல வசூலை பெற்று வருகிறது.

படம் வெளியாகி ஐந்து நாட்கள் ஆன நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.540 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் ரூ.800 கோடி வசூலை இந்த படம் தாண்டி விடும் என்கிறார்கள். அப்படி நடந்தால் தமிழ் சினிமாவில் அதிக வசூலை கொடுத்த நடிகராக ரஜினியே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

From Around the web