Categories: Cinema News latest news

ரஜினி dp மாற்றம்…! ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்த மருத்துவ நடிகை….!

சுதந்திர தினத்தை ஒட்டி பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை தங்களுடைய் வாட்ஸ் ஆப், ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற  சமூக வலைதளங்களில் உள்ள கணக்குகளின் முகப்பு படங்களை தேசியக்கொடியாக வைத்துக் கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரதமர் மோடியிடம் ரஜினி கட்சிக்கொடிக்குப் பதிலாக இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பற்றி முன்னரே பேசியிருக்கிறார். அதைபற்றி பிரதமரும் பரிசீலித்து வருகிறார் என்ற தகவலும் வைரலாகி வருகின்றது. மேலும் இரண்டு தினங்களுக்கு முன் ஆளுநரை சந்தித்தார்.

அது எதை பற்றி என்பதை சொல்லமுடியாது எனவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ரஜினி கூறியிருந்தார். மேலும் தேசியக்கொடியை பற்றி ரஜினி இன்னும் அவர் முகப்பு படத்தை மாற்றவில்லை என்ற கருத்து பரவி வந்தது. ஆனால் இன்று அவர் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றியிருக்கிறார்.அதுவும் செய்தியாக சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த நிலையில் சீரியல் நடிகையும் மருத்துவருமான டாக்டர் சர்மிளா இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இது ரொம்ப முக்கியம் என பதிலுக்கு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.அது தான் இப்பொழுது டிரெண்டாகி வருகின்றது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini