×

பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் சர்ச்கை கருத்தை சொன்ன ரஜினி!

ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர். இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த படம் தயாராகி வருகின்றது. இந்நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் டிஸ்கவரி சேனலுக்காக பியர் கிரில்ஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.
 

இந்த நிகழ்ச்சி நேற்று மாலை ஒளிப்பரப்பாகியது, இந்த நிகழ்ச்சி, கண்டிப்பாக ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதோடும் பெரும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது, ஆம், ரஜினிகாந்த் இந்தியா ஹிந்துக்கள் அதிகம் இருக்கும் நாடு.

இஸ்லாம், கிறிஸ்துவர்களுக்கு என்று நாடு உள்ளது, ஆனால், இந்தியா இந்துக்களுக்கான நாடாக பார்க்கப்பட்டது, ஆனாலும் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பது போல் கூறியிருந்தார்.

இது ரசிகர்களிடம் கடும் சர்ச்சையை எழுப்பியுள்ளது, அதோடு டுவிட்டரில் இது பெரிய வாக்கு வாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்தியாவை ஹிந்து மதத்துடன் குறிப்பிட்டு சொன்னது கோபப்படுத்தியுள்ளது சிலருக்கு.

மேலும், ரஜினிகாந்த் இந்தியாவில் வறுமைகள் ஒழிய வேண்டும், எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்க வேண்டும்.

ஏனெனில் இந்தியாவின் தண்ணீர் பிரச்சனை தான் பெரிதாக பார்க்கப்படுகின்றது என பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News