×

நடிகர் கருணாஸை சரமாரியாக விமர்சனம் செய்யும் ரஜினி ரசிகர்கள்: ஏன் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை விமர்சனம் செய்தால் மட்டுமே தங்கள் பெயர் தலைப்புச் செய்திகளில் வரும் என்பதை சரியாக புரிந்து கொண்ட பல அரசியல்வாதிகள் அவரை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

 

சமீபத்தில் வருமான வரி அலுவலகம் ரஜினிக்கு சலுகை தெரிவித்ததை கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் விமர்சனம் செய்து விட்டனர். இதனையடுத்து தற்போது நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவான கருணாஸ் விமர்சனம் செய்துள்ளார். ரஜினிகாந்த் தொடர்ந்து பாஜகவின் கருத்துக்களை முன்மொழிந்து வருவதால் அவருக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்ட இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்

கருணாஸின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் வலைதளங்களில் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வருமானவரித்துறை அலுவலகம் பொதுவாக ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றும், ஒரு கோடி ரூபாய்க்கு குறைவான அபராதம் விதிக்கப்பட்டிருந்தால் அதற்காக மேல்முறையீடு செய்ய தேவையில்லை என்று தெரிவித்திருந்தது என்றும், இதனால் தமிழகத்தில் மட்டும் ஆயிரத்து 700 பேர் பயனடைந்துள்ளனர் என்றும், அவர்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்றும், ஆனால் ரஜினிகாந்தை மட்டும் குறிப்பிட்டு அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருவதாகவும் ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web

Trending Videos

Tamilnadu News