சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 169 படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது.
ஜெயிலர் எனும் டைட்டில் உடன் ஒரு ஃபேக்டரி பேக்ரவுண்டில் ரத்தம் சொட்டும் அரிவாள் தொங்க அட்டகாசமாக இருந்த அந்த டைட்டில் லுக்கை பார்த்த விஜய் ரசிகர்கள், அந்த பேக்ரவுண்ட் பெல்ஜியம் ஃபேக்டரியின் புகைப்படம் என கூகுளில் அலசி ஆராய்ந்து கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், பதிலடி கொடுக்க காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு தக்காளி தொக்காக வந்து மாட்டி இருக்கிறது வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், நடிகர் விஜய் கோட் சூட் உடையை மாட்டிக் கொண்டு செம அழகாக ஒரு இடத்தில் போஸ் கொடுத்து உட்கார்ந்துள்ளார்.
ஆனால், அந்த இடத்தின் பேக்ரவுண்ட் எங்கே இருந்து உருவப்பட்டு, அங்கே நடிகர் விஜய்யை எப்படி ஒட்ட வைத்திருக்கின்றனர் என்பதை ரஜினிகாந்த் ரசிகர்கள் கண்டுபிடித்து கலாய்த்து வருகின்றனர்.
வெளிநாட்டில் உள்ள Doheny Eye Institue-ன் புகைப்படத்தைத் தான் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக எடிட்டர் ஆட்டையை போட்டுள்ளார் என கண்டு பிடித்து வெளுத்து வாங்கி வருகின்றனர்.
பொதுவாக இதுபோன்ற ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக்கையெல்லாம் உருவாக்கும் எடிட்டர்கள் கொடுக்கப்படும் தீமுக்கு தகுந்தவாறு கூகுளில் தான் போட்டோ எடுத்து உருவாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…