×

இயக்குனர் சுந்தர் ராஜனை கட்டம் கட்டும் ரஜினி ரசிகர்கள் ! இதுதான் காரணமா ?

முன்னணி இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதன் பின்னணியில் ரஜினி ரசிகர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

முன்னணி இயக்குனர் ஆர் சுந்தர்ராஜன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியதன் பின்னணியில் ரஜினி ரசிகர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

1980 களில் வைதேகி காத்திருந்தாள், ரயில் பயணங்களில், அம்மன் கோவில் வாசலிலே மற்றும் ராஜாதி ராஜா போன்ற மெஹாஹிட் படங்களை இயக்கியவர் ஆர் சுந்தர்ராஜன். ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி கேட்டரிங் தொழில் செய்துவந்தவர் இப்போது தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றும் இன்றும் சமூகவலைதளங்களில் அவர் இறந்துவிட்டதாக ஒரு வதந்தி வேகமாகப் பரவியது. இதை அவரது மகன் மற்றும் சம்மந்தப்பட்ட ஊடகம் ஒன்று மறுக்க அந்த செய்தியின் பின்னணியில் இருந்தது ரஜினி ரசிகர்கள் என்று தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் சமீபத்தில் மேடை ஒன்றில் பேசிய ஆர் சுந்தர்ராஜன் ‘ரஜினியை மிகவும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதே’ என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News