×

புது படத்திற்காக ஆளே மாறிய ரஜினி பட நடிகர் - லைக்ஸ் குவிக்கும் போஸ்டர்

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரின் புதிய பட போஸ்டர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
 

பாலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் அக்‌ஷய் குமார். தற்போதும் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். ரஜினி நடித்த 2.0 திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது பச்சன் பாண்டே என்கிற புதிய திரைப்படத்தில் அவர் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 22ம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

அதில், அடையாளம் தெரியாத அளவுக்கு அவரின் தோற்றம் மாற்றப்பட்டுள்ளது. இது பாலிவுட் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News