Categories: Cinema News latest news

முடியாதுனு சொன்ன ரஜினியை அந்த வார்த்தையால் அடக்கிய பாலசந்தர்…பலவருடங்கள் கழித்து வெளியான ரகசியம்…..

தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் பாலசந்தர் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் மட்டுமில்லாமல் இன்று வெற்றிகொடி காட்டி வரும் பல நட்சத்திரங்களை அறிமுகம் செய்த பெருமை பாலசந்தரை சேரும். கமலும் ரஜினியும் பாலசந்தரை சொந்த அப்பாக பாவித்து அவரை குருவாக நினைத்து இன்று வரை அவர் பெருமையை பறைசாற்றி வருகின்றனர்.

பாலசந்தர் இயக்கி ரஜினி பல படங்களில் நடித்து வெற்றி படத்தை பெற செய்துள்ளார். மேலும் இயக்குவது மட்டுமில்லாமல் தயாரிப்பு பணியையும் மேற்கொண்டு வந்த பாலசந்தர் அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா புரடக்‌ஷன் தயாரிப்பில் வெளிவந்த படங்களில் நடிகர் விக்ரம் நடித்த சாமி படமும் ஒன்று.

படம் வெளியாகி நல்ல வசூலையும் பெற்று மெகா ஹிட் படமாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக வெற்றி விழா ஏற்பாடு செய்து அதற்கு ரஜினியை அழைத்திருக்கிறார் இயக்குனர் பாலசந்தர். போன் மூலம் தொடர்பு கொண்டு விழாவிற்கு கண்டிப்பாக வரவேண்டும் என பாலசந்தர் அழைப்பு விடுக்க அதற்கு ரஜினி வரமறுத்துள்ளார்.

மேலும் நான் சமீபகாலமாக எந்த ஒரு விழாவிற்கும் செல்வதில்லை. நான் எல்லாரிடமும் இதை தான் சொல்லி வருகிறேன் என்று ரஜினி கூற பாலசந்தர் இடைமறித்து அப்போ எனக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா ? என்ற ஒரே கேள்வி கேட்டு ரஜினியை திணற வைத்துள்ளார். அவ்ளோதான் ரஜினி விழாவிற்கு பறந்து கலந்து கொண்டாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini