Categories: Cinema News latest news

ரஜினியுடன் அந்த மாதிரியான சீன்…! கூச்சப்பட்ட நடிகை…! நடந்தத தெரிஞ்சா நம்ம தலைவரா இப்படினு யோசிப்பீங்க..!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நிழல் உலக தாதாவை மையமாக வைத்து தயாராகுவதால் இந்தியாவின் முக்கியமான இடங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

ரஜினி என்றாலே அதில் மாஸூம் ஆக்‌ஷனும் கூடவே ஸ்டைலும் இருந்தால் தான் ரசிகர்களும் ஆவலுடன் வந்து ரசிப்பார்கள். அப்படி பட்ட படமாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டது குரு சிஷ்யன் திரைப்படம்.

இதையும் படிங்கள் : குருவுடன் தஞ்சம் புகுந்த அனுஷ்கா….! அப்போ இனிமே வரமாட்டாங்களா..? ஏங்கும் ரசிகர்கள்…!

அதிலும் அந்த படத்தில் அமைந்த கண்டுபுடிச்சேன் கண்டுபுடிச்சேன் என்ற பாடல் ஒட்டுமொத்த சினிமாவுமே ரசிக்கும் படியாக அமைந்திருந்தது. அந்த படம் தான் கௌதமி நடித்த முதல் தமிழ் படமும் கூட.

அவர் நடிக்க முதன் முதலில் வந்திருந்த போது நடன இயக்குனராக இருந்தவர் புலியூர் சரோஜா. வந்த புதிதிலயே ரஜினியுடன் கட்டிபிடிக்கும் சீனை சொல்லியிருக்கிறார். ஆனால் கௌதமி என்னால் எப்படி முடியும் என்று சங்கோஜப்பட்டாராம், இதை கவனித்துக் கொண்டிருந்த ரஜினி முதலில் டையலாக் சீன்களை வேண்டுமென்றால் எடுத்து விடுங்கள். அப்போது அவருக்கும் கொஞ்சம் பழகின உணர்வு வரும். அதன் பின் சகஜமாகி விடுவார் என அறிவுரை கூறினாராம் ரஜினி.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini