Categories: Cinema News latest news

‘லால் சலாம்’ படத்தில் வெயிட்டான ரோலில் நடிக்கும் ரஜினி!.. தலைவருக்கு இது செட்டாகுமா?..

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக உச்சம் பெற்றவர் நடிகர் ரஜினிகாந்த். இன்றைய இளம் தலைமுறையினர் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருகிறார் ரஜினிகாந்த். தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெய்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

rajini

அவரோடு மலையாள முன்னனி ஹீரோவான மோகன் லால் மற்றும் கன்னட முன்னனி ஹீரோவான சிவராஜ் குமார், தமன்னா போன்ற பல முக்கிய நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். ஜெய்லர் திரைப்படம் ஒரு ஆக்‌ஷன் படமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இந்தப் படத்தை அடுத்து ரஜினி ஒரு கெஸ்ட் ரோலில் ‘லால் சலாம்’ படத்தில் நடிப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியானது. மேலும் இந்தப் படத்தை ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்குகிறார். நடிகர்கள்
விஷ்ணுவிஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் லால்சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

rajini

ஜெய்லர் படத்தை தொடர்ந்து ரஜினி நடிக்கப் போகும் படமாக லால் சலாம் படம் இருக்கப் போகிறது. இந்தப் படத்திற்காக ரஜினி முற்றிலுமாக ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக சில தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஒரு முஸ்லீம் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இதையும் படிங்க : ரிஜக்ட் செய்த நிகழ்ச்சிக்கே விருந்தினராக வந்த பிரபலம்!.. பெரிய பல்பு வாங்கிய ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி!..

அதற்காக நீண்ட தாடி வளர்ப்பதாக தெரிகிறதாம். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அடுத்த ரஜினி படத்தையும் லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது. அதன் அதிகாரப்பூர்வ தகவல் நேற்று வெளியானது. அந்தப் படத்தை ஜெய்பீம் இயக்குனர் தான் இயக்குகிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini