Categories: Cinema News latest news throwback stories

மனதை உருக்கிய பாடலில் நடிக்க மறுத்த ரஜினி!.. என்ன காரணம் தெரியுமா..?

ilayaraja

இசைஞானி இசையில் வெளிவந்த ஜனனி ஜனனி மிகவும் பிரபலமான பாடலாகும். அப்பொழுது மன்னன் படத்தை இயற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் பி.வாசு அந்த பாட்டை போல் ரஜினிகாந்திற்கு அறிமுக பாட்டு வேண்டும் என்று இசைஞானியிடம் கேட்டார்.  அதற்க்கு இளையராஜா” அந்த மாதிரி பாடல்கள் எல்லாம் உருவாக்க தனி அருள் வேண்டும். உங்களுக்கு அதே பாணியில் வேறொரு பாட்டை உருவாக்கி தருகிறேன்” என்றார்.

RAJINIKANTH WITH ILAYARAJA

”அம்மா என்றழைக்காத உயிரில்லையே ”என்ற பாடலை கவிஞர் வாலியின் வரிகளில் கே.ஜே யேசுதாஸ் குரலில் அமைத்து கொடுத்தார். ரஜினிகாந்தின் அறிமுக பாடல் இப்படத்தில் மாறுபட்ட கோணத்தில் இருந்ததால் இதில் ரஜினிகாந்த் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். இச்செய்தி இளையராஜாவின் காதிற்கு சென்றது. அவர் ரஜினியிடம் இதைப் பற்றி கேட்டார். அதற்கு ரஜினி ” என் ரசிகர்கள் எப்போதும் துள்ளலான பாடல்களை தான் விரும்புவார்கள். இப்பாடல் மிகவும் மெதுவாக செல்கிறது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்று கூறினார்.

RAJINIKANTH 2

அதற்கு இளையராஜா” இப்பாடலில் நீங்கள் நடிக்கும் பொழுது அறிமுக பாடல் மாறுபட்டு இருக்கும். மேலும் குடும்பங்கள் மத்தியிலும், பெண்கள் மத்தியிலும், நல்ல வரவேற்பும் மரியாதையும் கிடைக்கும் ,நல்ல ரீச்சும் கிடைக்கும் ”என்று கூறினார். அதேபோல பாட்டு வெளிவந்து நல்ல வரவேற்பு கிடைத்தது . அம்மா பாடல் என்றாலே இப்பாடல் தான் முதலில் நினைவிற்க்கு வரும் அளவிற்க்கு சாதனைகளை படைத்தது. தமிழகத்தை பொறுத்தவரையில் அம்மா சென்டிமென்ட் எப்போதும் தோற்றதில்லை என்ற ஃபார்முலாவை இப்பாடல் காப்பாற்றியது. இப்பாடலின் வரிகளை கோயில்களில் செதுக்கி வைத்துள்ளதாக கவிஞர் வாலி கூறியிருக்கிறார். மேலும் இப்பாடலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் தான் இயக்குனர் பி.வாசுவின் தாயார் மரணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
SATHISH G