×

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினி.. வைரல் புகைப்படம்....

 
rajini

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ரஜினி உடல்நலம் பாதிக்கப்படு சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் விரைவில் நலம் அடைய வேண்டும் என அவரின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். அதன்பின் அவர் சிகிச்சையில் குணமடைந்தார். அவருக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதேபோல், அமெரிக்காவில் மீண்டும் அவருக்கு ஒரு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 

rajini

அதன்பின் அவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார். தற்போது அண்ணாத்த படத்தின் வேலையை முடித்து கொடுத்து விட்டு, மருத்துவ பரிசோதனைக்காக சில நாட்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் அவர் அமெரிக்கா கிளம்பி சென்றார். அவருடன் அவரின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் சென்றுள்ளார்.

rajini

இந்நிலையில், அமெரிக்காவில் அவருக்கு சிகிச்சையளித்த மாயோ மருத்துவமனை (Mayo clinic) வளாகத்தில் மகளுடன் அவர் நடந்து வரும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இப்புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் பலரும் பகிர்ந்து விரைவில் அவர் நலமுடன் திரும்ப வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர்.

rajini

From around the web

Trending Videos

Tamilnadu News