Categories: Cinema News latest news

”என்றுமே ராஜா நீ ரஜினி” பாட்டின் பின்னனியில் இருக்கும் ரஜினியின் போராட்டம்…! வைரமுத்துவிடம் கெஞ்சிய சம்பவம்…

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பிடித்தமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். காலங்கள் போனாலும் அவரது ஸ்டைலாலும் துள்ளலான நடிப்பாலும் இன்று வரை ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் ரஜினியின் ஆரம்ப கால படங்கள் இன்று வரை அவரது புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்த அண்ணாமலை படத்தை யாராலும் மறந்திருக்க முடியாது.

ஒரு பக்கம் காதல், ஒரு பக்கம் நண்பன், ஒரு பக்கம் குடும்பம், ஒரு பக்கம் பகை என அனைத்தையும் தன் மேல் சுமந்து கொண்டு கதையை நகர்த்தும் நாயகனாக நடித்திருப்பார் நடிகர் ரஜினி. படம் சூப்பர் டூப்பர் ஹிட். படம் ஒரு பக்கம் வெற்றி பெற்றாலும் அந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் இன்று வரை இசை பாடிக்கொண்டிருக்கின்றன.

அதிலும் கொண்டையில் தாழம்பூ என்ற பாடல் நிலைத்து நிற்கும் பாடலாகும். வைரமுத்துவின் வரியில் தேவாவின் இசையில் அமைந்த பாடலில் குஷ்பூ பேரும் சேர்ந்து வரும். தேவா முதலில் யோசிக்க வைரமுத்து இப்படி போட்டு பாருங்க நல்ல ஹிட் ஆகும் என சொல்லி சம்மதிக்க வைத்தாராம். அதன் பின் வந்த ரஜினியிடமும் கூற குஷ்பூ பெயரா வருது? அப்போ என் பெயரும் வருமா? என வைரமுத்துவிடம் கேட்டாராம். அதுவரை யோசிக்காத வைரமுத்து ரஜினி இப்படி கேட்டதும் ‘என்றுமே ராஜா நீ ரஜினி’ என்ற வரியை சேர்த்தாராம்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini