×

சிஏஏ குறித்து ரஜினி பேட்டி: ஊடகங்களுக்கு ஒருவார செய்தி ரெடி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு பேட்டி அளித்தாலோ அல்லது ஒரு விழாவில் பேசினாலோ அடுத்த சில நாட்களுக்கு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பிசியாக இருப்பார்கள் என்பது தெரிந்தே.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு பேட்டி அளித்தாலோ அல்லது ஒரு விழாவில் பேசினாலோ அடுத்த சில நாட்களுக்கு ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பிசியாக இருப்பார்கள் என்பது தெரிந்தே. இந்த நிலையில் சற்று முன்னர் செய்தியாளர்களை சந்தித்து சிஏஏ, என்.ஆர்.சி குறித்து தனது கருத்தை ரஜினிகாந்த் தெரிவித்தார். இதனையடுத்து மீண்டும் ஊடகங்களும் அரசியல்வாதிகளும் பிசியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சிஐஏ கொடுத்து ரஜினிகாந்த் குறிப்பிட்டபோது ’இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றும் ஒருவேளை அப்படி ஆபத்து ஏற்பட்டால் நான்தான் முதலில் குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்

அதேபோல் என்ஆர்சி என்பது மிகவும் அவசியமானது என்றும் இந்த சட்டத் நடைமுறைக்கு வந்தால் தான் வெளிநாட்டினர் எத்தனை பேர் இந்தியாவில் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார் 

மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தேவை என்பது தனது கருத்து என்று கூறிய ரஜினிகாந்த் மாணவர்கள் போராடுவதற்கு முன்பாக தீர யோசிக்க வேண்டும் என்றும் இல்லையெனில் அவர்களை அரசியல்வாதிகள் தவறாக பயன்படுத்தி அவருடைய வாழ்க்கையை மாற்றி விடுவார்கள் என்றும் கூறினார் 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தனக்கு இன்னும் சம்மன் வரவில்லை என்றும் அவ்வாறு சம்மன் வந்தால் உரிய முறையில் அதற்கு விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல் வருமான விஷயத்தில் தான் சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை என்றும் சட்டப்படிதான் தான் நடந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

From around the web

Trending Videos

Tamilnadu News