Categories: Cinema News latest news

எங்களுக்குள்ள எவ்ளவோ பகை இருந்தாலும் அவர்தான் சூப்பர் ஸ்டார்! ரஜினியை கொண்டாடிய சத்யராஜ்

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் சத்யராஜ் இவர்களுக்கிடையில் ஒரு பனிப்போர் இருப்பதாகவே கூறிவந்தார்கள். இருவரும் சேர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருக்கின்றனர். அதில் மிகவும் வரவேற்பை பெற்ற படமாக மிஸ்டர் பாரத் படம் அமைந்தது.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்திலேயே இருவருக்குமிடையில் ஏதோ பிரச்சினை வந்ததாக தகவல்கள் வெளியானது.அதாவது படத்தில் தன்னை விட சத்யராஜ் ஸ்கோர் செய்து விடுவார் என்ற பயத்தில் படத்தின் இயக்குனர் எஸ்.பி.முத்துராமனிடம் ரஜினி சொன்னதாகவும் அதன் காரணமாக சத்யராஜ் காட்சிகளை முத்துராமன் நீக்கிவிட்டதாகவும் சொல்லப்பட்டு வந்தது.

இதையும் படிங்க : வெளியில் இருந்தே ஆட்டம் காட்டும் ரஜினி – சர்வதேச தலைவர்களையும் அசரவைத்த ‘ஜெய்லர்’..

இது ஒரு கட்டத்தில் சத்யராஜுக்கு தெரியவர இதற்கு காரணம் ரஜினிதான் என்று நினைத்து கொண்டு அதிலிருந்தே ரஜினி மீது ஒரு கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டு வந்தது. ஆனால் சத்யராஜ் ஒர் மேடையில் ரஜினியை பற்றிய வீடியோ வைரலாகி வருகின்றது.

அதே மிஸ்டர் பாரத் படத்தில் நடந்த நிகழ்வுதான். ஹிந்தி படத்தின் திரிசூலம் படத்தின் ரீமேக்தான் மிஸ்டர் பாரத்தாம். ஹிந்தியில் ரஜினி கதாபாத்திரத்தில் அமிதாப்பும் சத்யராஜ் கதாபாத்தில் சஞ்சய் குமாரும்  நடித்திருப்பார்களாம். ஹிந்தி படத்தின் கதைப்படி அமிதாப்பை காப்பாற்றுவது சஞ்சய் குமார்தானாம்.

ஆனால் தமிழில் ரஜினியை வேறொரு நடிகர் காப்பாற்றுவதா? அவரை அவரே காப்பாற்றிக் கொள்ளட்டும் மாதிரி ரஜினியே அவரை காப்பாற்றுவதுமாதிரி படமாக்கத் திட்டமிட்டிருந்தார்களாம். அந்த சண்டை காட்சிகள் எடுக்கும் போது ரஜினி இது ஹிந்தியில் வேறு மாதிரில இருக்கும் என சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க : கமலின் வேலுநாயக்கர் இன்ஸ்பிரேஷன் இந்த அரசியல் பிரமுகர் தானா? யாருக்கும் தெரியாத சீக்ரெட்டினை உடைத்த பிரபலம்…

அதற்கு முத்துராமன்  நீங்கள் பெரிய சூப்பர் ஸ்டார். உங்களை வேறொரு நடிகர் காப்பாற்றுவது மாதிரி இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என கூற ரஜினியோ இல்ல, இல்ல சத்யராஜ்தான் காப்பாற்றனும் என அடம்பிடித்து அந்த காட்சியை எடுக்கவைத்தாராம். இதனால் தான் ரஜினி இன்று வரை சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என சத்யராஜ் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini