×

மகள் கொடுத்த சர்ப்பரைஸ்!.... மீண்டும் தாத்தா ஆகிறார் ரஜினி... 

 
rajini

தமிழ் சினிமாவில் 65 வயதை கடந்த பின்பும் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பெறும் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம், முடிவடையும் நிலையில் இருக்கிறது.

நடிகர் ரஜினிக்கு ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா என 2 மகள்கள். இதில் ஐஸ்வர்யா நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். அதேபோல், சௌந்தர்யா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர். அவருக்கு 2 வயதில் வேத் எனும் மகன் இருக்கிறார்.

rajini

கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற சௌந்தர்யா 2 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் மற்றும் தொழிலதிபர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது அவர் 2ம் முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த தகவலை அமெரிக்கா சென்று திரும்பிய பின்னரே ரஜினியிடம் இதை கூறி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சௌந்தர்யா. இதைத்தொடர்ந்து, 4வதாக பேத்தி பிறப்பாளா இல்லை மீண்டும் பேரனே பிறப்பான என்கிற ஆவலில் ரஜினி இருக்கிறாராம்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News