×

ரஜினி சிறந்த நடிகன்.. நிஜ வாழ்க்கையில் அல்ல : நெகிழும் பாரதிராஜா

இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
 

அப்போது ரஜினி இன்னும் ஹீரோவாக நடித்துக்கொண்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு பதில் கூறிய பாரதிராஜா ‘ ரஜினி உண்மையிலேயே அழகன். நான் பரட்டையாக காண்பித்த போதே அவரின் ஸ்டைல் பிரமாதமாக இருக்கும். சினிமாவில் அவர் சிறந்த நடிகன். ஆனால், இன்றுவரை நிஜவாழ்க்கையில் நடிக்க தெரியாமல் இமேஜ் இல்லாமல், விக் கூட இல்லாமல் வலம் வருகிறார்.  அதை பாராட்ட வேண்டும். கொள்கை ரீதியாக எங்களுக்குள் கருத்து மோதல் இருந்தாலும் அவரை நான் பாராட்டியே ஆக வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News