தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருந்து சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் நடிகர் கமல். சினிமாவில் ரஜினிக்கு முன்பாகவே கமல் வந்திருந்தாலும் ரஜினிக்கு இருக்கும் ரசிகர்களின் பலம் ஏராளம். அவரின் ஸ்டைல், சுறுசுறுப்பான குறும்புத்தனமான நடிப்பு இவற்றாலேயே ரசிகர்களை கட்டி போட்டு வைத்துள்ளார் ரஜினி.
இருவரின் படங்களுக்கு ஒரு காலத்தில் போட்டிகள் பலமாகவே இருந்தது. ஆனால் இருவருக்குள் அந்த போட்டி பொறாமை இருந்ததில்லை. இந்த நிலையில் ரஜினியும் கமலும் அரசியலில் சாதித்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நுழைந்தார்கள். கமல் ஏற்கெனவே கட்சியை ஆரம்பித்து இப்பொழுது அந்த கட்சியின் நிலைமை என்ன ஆனது என்று கூட தெரியவில்லை.
இதையும் படிங்க : பல தீய பழக்கங்களுக்கு ஆளான சந்திரபாபு!.. அதிலிருந்து மீட்டது யாருனு தெரியுமா?..
ஆனால் ரஜினி வருவேன் வருவேன் என்று சொல்லியே அரசியல் பக்கம் வராமல் இருந்து விட்டார். ஆனால் இருவரின் அரசியல் எண்ணங்கள் வெவ்வேறானவை. இந்த நிலையில் இருவருக்கும் மிகத்தொடர்புள்ள நடிகரான ஒய்.ஜி.மகேந்திரன் இவர்களை பற்றி சுவராஸ்யமான சில தகவல்களை பகிர்ந்த பொழுது அவரிடம் இந்த இருவர் ஒருவேளை அரசியலுக்கு வந்தால் நீங்கள் யார் கட்சியாக இருப்பீர்கள் என்று கேட்டதற்கு சந்தேகமே வேண்டாம். கண்டிப்பாக ரஜினி கட்சியாக தான் இருப்பேன்.
அவர் எனது சொந்தக்காரர் என்ற முறையில் சொல்லவில்லை. கமலின் அரசியல் சிந்தனைகள் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்றும் ஆன்மீகத்தை நம்பாதவராய் இருந்தாலும் ஒவ்வொரு சமயங்களில் ஏதாவது ஒரு மதத்திற்கு ஆதரவாக பேசுகிறார் என்றும் ஒரு காலத்தில் எம்மதமும் சம்மதம் என்று சொன்னவர் இப்பொழுது அப்படி இல்லை என்றும் நடிகர் கமலை பற்றி மகேந்திரன் தெரிவித்தார். ரஜினியை விட கமலுக்கு நெருக்கமானவர் தான் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
Cook with…
சர்ச்சை நாயகன்…
Ajith Vijay:…
OTT-யில் புதிய…
சிம்புவுடன் இணைந்த…