×

ரஜினிக்கு எதிராக மக்களவையில் குரல் கொடுத்த ரஜினி பட தயாரிப்பாளரின் சகோதரர் 

சமீபத்தில் ரஜினிகாந்த் மீது வருமான வரித்துறை தாக்கல் செய்த வழக்கை வாபஸ் வாங்கியது. இதனால் மத்திய அரசு ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் குற்றஞ்சாட்டினர். இது குறித்து விவாதங்கள் ஊடகங்களில் தினந்தோறும் நடந்து வருகின்றன என்பதும் சமூக வலைதளங்களில் இது குறித்து விமர்சனங்கள் மத்திய அரசு மீது கடுமையாக வைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 

 

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தை தயாரித்து வரும் சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறன் அவர்களின் சகோதரர் தயாநிதிமாறன் இன்று மக்களவையில் இதுகுறித்து கடுமையான ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது 

ரஜினிக்குக் கிடைத்த வரிச்சலுகை நடிகர் விஜய்க்கு கிடையாதா?, தமிழகத்தில் தேர்தல் வருவதால் ரஜினிக்கு வரிச்சலுகை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஆனால் விஜய்யை அவர் படப்பிடிப்பில் இருந்த இடத்தில் இருந்து கட்டாயப்படுத்தி அழைத்து வந்துள்ளது. இது பாரபட்சமானது என்று தயாநிதி மாறன் மக்களவையில் பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News