Categories: Cinema News latest news

இன்னைக்கு என் மனைவி உயிரோட இருக்க ரஜினி தான் காரணம்… அவரை மறக்கவே முடியாது… கண்ணீர்விட்ட நடிகர்…

Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் என்னதான் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் அவர் அந்த திமிர்த்தனத்தினை என்னைக்குமே காட்டியது இல்லை. எப்போதுமே தன்னுடன் இருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக உதவி செய்து வருவார். அப்படி அவர் லிவிங்ஸ்டனின் வாழ்க்கைக்கே ஒளி சேர்த்து இருக்கிறார்.

பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் சின்ன வேடத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். அதன் பின் வில்லன் வேடம் ஏற்று நடித்தவர் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் சுந்தர புருஷன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்த அசத்திருப்பார்.

இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒருத்தரு!.. மனோஜால் விஜயாவிடம் வசமாக சிக்கிய ரோகினி…போச்சா?

அதன்பின், அஜித் குமார் நடிப்பில் வெளியான கன்னி ராசி திரைப்படத்தில் திரைக்கதை எழுதினார்.  தற்போது கணிசமான படங்களில் குண சித்திரவேத்தில் நடித்து வருகிறார்.  கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தில் அவரின் நண்பராக நடித்திருப்பார்.

அந்த சமயத்தில் லிவிங்ஸ்டன் மனைவி ஜெஸ்ஸி இருதயராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நிறைய கடன்களில் இருந்தவர் மனைவியின் மருத்துவ செலவுக்காக ரொம்பவே திண்டாடி விட்டாராம். அதை தன்னுடைய சக நண்பர்களுடன் லால் சலாம் ஷூட்டிங்கில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.

இதையும் படிங்க: கமல் எட்டி உதைத்ததில் காற்றில் பறந்த சேர்… பதறியடித்த படக்குழு!.. நடந்தது இதுதான்!..

இதை உதவி இயக்குனர்கள் மூலம் அறிந்த ரஜினி காந்த் உடனே லிவிங்ஸ்டனை அழைக்கிறார். எதுவும் கேட்காமல் அவர் கையில் 15 லட்சம் ரூபாயை கொடுத்து மனைவியின் சிகிச்சையை  துரிதப்படுத்த வேண்டும் என கூறி இருக்கிறார். கடன்கள் பல இருந்தாலும் அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தார்.

ஆனால் நான் உன் அண்ணனாக தான் இதை செய்கிறேன். மறுக்காமல் வாங்கிக் கொள் என வலியுறுத்தி ரஜினிகாந்த் திணித்திருக்கிறார். பின்னர் தான் லிவிங்ஸ்டனுக்கே விஷயம் தெரிந்ததாம். ரஜினி இப்படி யாருக்கும் தெரியாமல் நிறைய பேருக்கு உதவிகள் செய்வாராம்.  தன் வலது கை செய்வதை எடுத்துக் கைக்கு தெரியாமல் இன்னமும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ரொம்பவே நல்ல மனிதர். என் வீட்டு பூஜை அறையில் அவரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறேன். என் பிள்ளைகள் கூட நம் அம்மா இன்று இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான் என பெருமையாக கூறிக் கொள்வதையும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடியா இருக்கேன்… அவர் மீது எனக்கு ஓவர் லவ்வு… ரொமான்டிக்காக பேசும் நாயகி!…

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily