16 நாட்களில் ரூ.780 கோடி... வசூலில் மிரட்டும் ரஜினியின் ஜெயிலர் 2 !
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ஜெயிலர் 2 . நெல்சன் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், சிவராஜ்குமார், மோகன்லால், ஹ்ரித்திக் ரோஷன், சுராஜ், நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையாமைத்துள்ள இந்த ப்படத்தினை சன் பிச்சர்ஸ் தயாரித்துள்ளது.

கடந்த 15ம் தேதி வெளியான இப்ப்படம் வெளியான நாள் முதலே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் காலக்கி வருகிறது. வெளியான திரையரங்குகள் எல்லாவற்றிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. ரஜினி நடித்து வெளியான 2.ஓ படம்தான் இதுவரை அதிக வசூல் செய்த படமாக இருந்து வந்தது. இந்த சாதனையை ஜெயிலர் 2 அசால்டாக முறியடித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் 2 16 நாட்களில் உலகளவில் ரூ.780 கோடி வசூல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரஜினி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அடுத்த சில நாட்களிலும் இதே வேகத்தில் வசூல் தொடர்ந்தால், படம் மேலும் சில முக்கிய பாக்ஸ் ஆபிஸ் மைல்கற்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
