கிரீஸ் முதல் சென்னை வரை அனிருத் திருமணத்தை முன்னின்று நடத்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!..

 
ani

அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நவம்பர் 21ம் தேதி சென்னையில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திரையுலகம், விளையாட்டுத்துறை மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் பங்கேற்று வரும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ani

இதனைத் தொடர்ந்து இன்று சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்று வருகிறது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர் சித்தார்த், அதிதி ராவ் ஹைதரி, இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா, கிரிக்கெட் வீரர்கள் கேன் வில்லியம்சன், டேல் ஸ்டெய்ன், டேனியல் வெட்டோரி, முத்தையா முரளிதரன் உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

ani

மேலும், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் சமூக வலைத்தளத்தில் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ani

இந்நிலையில், பிரபலங்கள் ஒவ்வொருவராக வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்துக்கொண்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.

CR  Desk
CR Desk

7938 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web