Categories: Cinema News latest news

ரஜினியின் ஆயுள் அப்பவே முடிந்திருக்கும்…! பக்கபலமாக இருந்த ஒரே நடிகை…!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஏராளமான இன்னல்களை சந்தித்து தான் இப்படி ஒரு இடத்தை அடைந்திருக்கிறார். வில்லனாக நடித்து பின் ஹீரோவாக கலக்கி இன்று தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டாராக உயர்ந்து நிற்கிறார்.

இவருடன் 80களில் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட கதாநாயகிகள் ஏராளம். கிட்டத்தட்ட அனைத்து பெண் நட்சத்திரங்களுடனும் ஜோடி சேர்ந்தார். ஆனால் நடிகை ஸ்ரீபிரியா ரஜினிகாந்த் இவர்கள் இணைந்து நடித்த படங்கள் தான் ஏராளம். ரஜினியுடன் அதிக படங்களில் நடித்த பெருமை ஸ்ரீபிரியாவுக்கு மட்டுமே சேரும்.

முதல் முதலில் பைரவி என்ற படத்தின் மூலம் இருவரும் இணைந்தார்கள். அதனை அடுத்து நிறைய படங்களில் நடிக்க தொடங்கினார்கள். அந்த சமயத்தில் ரஜினிகாந்துக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்திருக்கின்றன. அதனால் உடல் நிலை சரியில்லாமல் மிகவும் மோசமான நிலையில் தான் இருந்திருக்கிறார். ரஜினியின் ஆயுள் முடிய போகிறது என்றெல்லாம் பத்திரிக்கையில் எழுதிவிட்டார்களாம்.

அந்த நிலைமையில் அவருடன் நடித்த நடிகைகளில் ஸ்ரீபிரியாவுக்கு மட்டும் தான் ரஜினியின் உடல் நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டாராம். மேலும் ரஜினிக்கு பக்க பலமாகவும் இருந்திருக்கிறார். பாலசந்தரிடம் போய் சென்று நீங்கள் சொன்னால்தான் ரஜினி கேட்பார். அவரை பழைய நிலைக்கு கொண்டு வர உங்களால் தான் முடியும் என்று கெஞ்சியிருக்கிறாராம்.அப்படி ஒரு நட்பு இருந்ததாம் ரஜினிக்கும் ஸ்ரீபிரியாவுக்கும் இடையில். இப்பொழுது ஒரு மாமேதையாக நிற்கிறார் ரஜினிகாந்த்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini