×

ரஜினி மலை, அஜித் தலை: தமிழக அமைச்சர் அதிரடி பேட்டி!

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவ்வப்போது பரபரப்பான பேட்டி கொடுத்து வருபவர் என்பது தெரிந்ததே. சமீபத்தில் கூட துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியது குறித்து பரபரப்பான பேட்டி அளித்திருந்தார். இந்த பேட்டி தமிழகமெங்கும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது

 

இந்த நிலையில் தற்போது விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தது குறித்து அவர் தனது கருத்துக்களை பேட்டி ஒன்றின் மூலம் கூறியுள்ளார். விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்ததில் அரசியல் பின்னணி எதுவும் இல்லை என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ’ரஜினியுடன் விஜய்யை ஒப்பிடக் கூடாது’ என்றும் ’ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் ரஜினிக்கு நிகர் அஜித் தான் என்றும் ரஜினி மலை என்றால் அஜித் தல என்றும் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்

ஏற்கனவே ரஜினிக்கு அவ்வப்போது ஆதரவு தெரிவித்துவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ரஜினியுடன் அஜித்தை ஒப்பிட்டு, ரஜினிக்கு நிகரானவர் விஜய் இல்லை என்று விஜய்யை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது விஜய் ரசிகர்கள் கடுப்பாக்கி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் ரஜினி மற்றும் ராஜேந்திர பாலாஜியை விமர்சனம் செய்து வருகின்றனர் 

From around the web

Trending Videos

Tamilnadu News