Categories: Cinema News latest news

ரஜினி சார் படத்துல நான் தான் அந்த வேலை பார்த்தேன் … உண்மையை உளறிய மொக்க ஜோக் அதிதி.!

தமிழ் சினிமாவில் பல பிரமாண்ட திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களை பிரமிக்க வைத்த இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் அதிதி சங்கர் விரும்ன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

தற்போதைய டாப் ட்ரெண்டிங் அதிதி சங்கர்தான். அவருடைய குறும்புத்தனமான பேட்டிகளும் அவர் அடிக்கும் மொக்க ஜோக்குகளும் தற்போது இணையத்தில் வெகு வைரலாக பரவி வருகிறது. முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்டார் என்றே கூறலாம்.

இவர் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிடும் போது, நான் எனது அப்பாவுடன் ஷூட்டிங் ஸ்பாட் சென்றுள்ளேன். பாடல் காட்சிகளுக்கு மட்டும் எங்களை கூட்டு செல்வார். அப்போது சிவாஜி படத்தில் வாஜி வாஜி பாடல் காட்சி ஷூட்டிங் நடைபெற்று இருந்தது.

இதையும் படியுங்களேன் – நல்ல வேலை தப்பித்துக்கொண்ட தனுஷ்… நயன்தாராகிட்ட மாட்டியிருந்தால் என்ன கதி ஆகியிருக்குமோ.?

அப்போது கேமராவுக்கு பின்புறம் இருந்து ரஜினி சார் மீது பூக்களை வீசும் வேலை செய்துள்ளேன். அப்போது ரஜினி சார் அங்கிருந்து வருவார் கேமரா பின் இருந்து பூக்களை வீச வேண்டும். அப்படி அந்த காட்சி படமாக்கப்பட்டது. என்று மிகவும் எதார்த்தமாக அந்த பேட்டியில் பேசியிருந்தார் நடிகை அதிதி சங்கர்.

Manikandan
Published by
Manikandan