rajini
அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமாகி பல படங்களில் வில்லனாக நடித்து ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர் நடிகர் ரஜினி. ஒருகட்டத்தில் வசூலை வாரிக்குவிக்கும் சூப்பர்ஸ்டாராகவும் மாறினார். இப்போது வரை இவரின் இடத்தை நிரப்ப எந்த நடிகராலும் முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவரின் சூப்பர்ஸ்டார் படத்திற்கு இப்போதை நடிகர்கள் ஆசைப்பட்டு வருகின்றனர்.
rajini
சில படங்களில் நடிக்கும்போது இந்த படம் வெற்றிபெறும் என்கிற எண்ணம் ஹீரோவுக்கு வரும். இயக்குனர் மற்றும் கதை ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையே அதற்கு காரணம். சில சமயம் அப்படி நினைத்தும் அந்த படங்கள் வெற்றி பெறாமல் கூட போகும். ரஜினி பெரிதும் எதிர்பார்த்த பாபா, லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் ரசிகர்களை கவராமல் போனது.
ஆனால், இதே ரஜினி ஓடாது என நினைத்து நடித்த ஒரு திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது என்றால் நம்புவீர்களா?. ஆனால், அது உண்மையில் நடந்தது. விஜயகாந்தை வைத்து அம்மன் கோவில் கிழக்காலே, வைதேகி காத்திருந்தாள் என பல ஹிட் படங்களை கொடுத்தவர் ஆர்.சவுந்தரராஜன். மோகனை வைத்தும் பல சில்வர் ஜூப்ளி திரைப்படங்களை கொடுத்தவர்.
இவரின் இயக்கத்தில் ரஜினி நடித்த திரைப்படம் ராஜாதி ராஜா. சுந்தர்ராஜனுக்கு ஹீரோக்களிடம் கதை சொல்லி பழக்கமில்லை. எனவே, ரஜினியிடம் அவர் முழுக்கதையையும் கூறவில்லை. இதுவே ரஜினிக்கு பெரிய அதிருப்தியாக இருந்துள்ளது. ஆனால், படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பில் ரஜினியை சுந்தர்ராஜன் பெரிதாக மதிக்கவே இல்லையாம். ஆனாலும், ஒத்துக்கொண்டதால் படத்தை முடித்துக்கொடுத்துள்ளார் ரஜினி. சுந்தர்ராஜன் காட்சியை எடுக்கும் விதம் எல்லாவற்றையும் பார்த்த ரஜினி இந்த படம் கண்டிப்பாக ஓடாது என நினைத்தாராம்.
ஆனால், நடந்ததோ வேறு. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய ஓப்பனிங் இருந்துள்ளது. முதல் நாள் வசூலாக ரூ.94 லட்சத்தை இப்படம் வசூல் செய்தது. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் பெரிய ஹிட் அடித்த ஷோலே திரைப்படத்தின் முதல்நாள் வசூலை விட ரூ.4 லட்சம் அதிகம். இந்த திரைப்படம் சென்னையில் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. மதுரையில் வெளியான இரண்டு தியேட்டர்களில் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது.
அதில் ஒரு திரையரங்கில் 181 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்டது. மேலும் தென்காசி மாவட்டத்தில் சினிமா வரலாற்றில் 100 நாட்கள் ஓடிய முதல் படம் என்கிற பெருமையையும் இப்படம் பெற்றது. ரூ.1.20 கோடி லட்சத்தில் உருவான இந்த திரைப்படம் ரூ.16 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது. 1989ம் வருடம் இது மிகப்பெரிய வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் ரஜினி ஓடாது என நினைத்து ஆனால் அவரையே ஆச்சர்யப்பட வசூலை ராஜாதி ராஜா படம் கொடுத்தது.
இதையும் படிங்க: தனுஷ் பட டைட்டிலை விஜய் படத்திற்கு வைத்த லோகேஷ் கனகராஜ்… இப்படியெல்லாம் நடந்திருக்கா?
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…