×

தொற்றால் வீட்டோடு முடங்கிய ரஜினி... குவிந்த ரசிகர்கள்!

தீபாவளி பண்டிகை அன்று ரஜினிகாந்தை பார்த்துவிட வேண்டும் என்கிற ஆசையில் போயஸ் கார்டனில் இருக்கும் அவரின் வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் கூடினார்கள். 

 

நல்ல நாளும் பொழுதுமாக ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைக்க விரும்பவில்லை ரஜினி. அதனால் மாஸ்க் அணிந்து கேட்டிற்கு பின்னால் நின்று ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

ரஜினியை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவரை மனித கடவுளே, தெய்வமே என்று அழைத்து கோஷமிட்டார்கள். ரஜினி அரசியல் கட்சி துவங்குவார், 2021ம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். 

ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை வந்து ரஜினியின் அரசியல் திட்டத்தை மாற்றிவிட்டது. ரஜினி தன் உடல்நலனை கருத்தில் கொண்டு வீட்டோடு இருக்கிறார். 

அண்ணாத்த படப்பிடிப்பில் கூட கலந்து கொள்ள முடியாது என்று தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். இது போன்ற நேரத்தில் வெளியே வந்து மக்களை சந்தித்தால் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்களை எச்சரித்ததால் ரஜினி வீட்டிலேயே இருக்கிறார்.

முன்னதாக ரஜினி அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்தார். ஆனால் கொரோனா காலத்தில் பயணம் செய்வதும், படப்பிடிப்பில் பங்கேற்பதும் ஆபத்தானது என நண்பர்கள் அவருக்கு அறிவுரை வழங்கினார்கள். அதன் பிறகே தற்போதைக்கு அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வது இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ரஜினி.


 

From around the web

Trending Videos

Tamilnadu News