தள்ளிப்போனது அண்ணாத்தே மட்டுமல்ல!.. அரசியல் அறிவிப்பும்தான்....
Thu, 24 Dec 2020

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வந்த அண்ணாத்தே திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.
ஆனால், படப்பிடிப்பு குழுவினருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதிர்ஷ்ட வசமாக ரஜினிக்கு பரிசோதனயில் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனாலும் ரஜினி தன்னை 15 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
இதன் காரணமாக டிசம்பர் 31ம் தேதி அவர் அறிவிக்கவிருந்த அரசியல் அறிவிப்பு ஜனவரி 17ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி ரஜினியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.