Categories: Cinema News latest news throwback stories

ரஜினி செய்த வேண்டாத வேலைகள்… ஒழுங்காக நடிப்பை மட்டும் பாருங்க சார்… விவரம் இதோ…

சிலருக்கு நடிப்பு நன்றாக வரும், ஆனால் மற்ற துறைகளில் வேண்டாம் என ஒதுங்கி விடுவர். வெகு சிலருக்கு மட்டுமே மற்ற துறைகளிலும் கொஞ்சம் இறங்கி வேலை செய்து வெற்றி காண்பர். அதில் மிக முக்கியமானவர் கமல்ஹாசன்.

அவருக்கு சக போட்டியாளராக இருக்கும் ரஜினிக்கு நடிப்பு மட்டுமே பிரதானம். அதில் எவ்வளவு உழைப்பு போட்டு ரசிகர்களை என்ஜாய் செய்ய வைக்க முடியுமோ அதனை செய்ய வைத்து விடுவார் ரஜினி.  ஆனாலும் சில சமயம் வேண்டாத வேலைகளை செய்து பல்பு வாங்கிய தருணங்களும் உண்டு.

அதில் ஒன்று, வள்ளி திரைப்படம். தற்போது வரை ரஜினியை மாஸ் ஹீரோ என்ற  லெவலில் தான் வைத்து பார்த்து வருகிறோம். அவர் 100 பேரை அடித்து ஸ்டைலாக நடந்து வந்தால் தான் அது ரஜினி. அப்படி இருந்தவர் வள்ளி எனும் திரைடத்தில் கதை திரைக்கதை எழுதி, தயாரித்து, அதில் வயதான தோற்றத்தில் நடித்தார் ரசிகர்கள் சுத்தமாக ஏற்றுக்கொள்ளவில்லை படம் தோல்வியடைந்தது.

 

இதையும் படியுங்களேன் – இவங்களுக்கு இதே வேலையா போயிடிச்சு… முதலில் விஜய்.. இப்போ தனுஷ் சிக்கிட்டார்…

அடுத்து பாபா. இதில் ரஜினி மாஸ் ஹீரோ தான். ஆனால் கதை திரைக்கதை தயாரிப்பு ரஜினி. தனது ஆன்மீக அரசியல் தத்துவத்தை தொட்டு பார்த்த திரைப்படம். படத்தின் கதைக்களம் அந்த நேரத்தில் ரசிகர்களுக்கு பிடிக்காத காரணத்தால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையும் படியுங்களேன் – முதலில் அட்டர் ஃபிளாப்… அடுத்தடுத்து மெகா ஹிட்.! மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார் முதல்.. சமுத்திரக்கனி வரை…

இதற்கிடையில், மன்னன் திரைப்படத்தில் இளையராஜா இசையில் அடிக்குது குளிரு எனும் பாடலில் சிறிய பகுதியை ரஜினி பாடியிருந்தார். அந்த பாடலை அவரே கேட்டிருப்பார் போல, அதற்கப்புறம் மாஸ் வசனம் பேசுவதோடு சரி பாட்டுக்கும் நோ தான்.

Manikandan
Published by
Manikandan