×

கட்சியும் வேணாம்...ஒரு கொடியும் வேணாம்: அன்றும் இன்றும் என்றும் ராஜாதி ராஜா

1989-ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் தான்; ராஜாதிராஜா. பட டைட்டில் ரஜினிக்கு என்றே வைத்;திருப்பார்கள் போல. ரஜினிகாந்த், ராதா, நதியா, ஜனகராஜ், ராதாரவி, ஆனந்தராஜ், வினுசக்கரவர்த்தி, விஜயகுமார் என நட்சத்திர பட்டாளங்களோடு படம் களமிறங்கியது. 

 
Rajadhi raja

1989-ல் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் தான்; ராஜாதிராஜா. பட டைட்டில் ரஜினிக்கு என்றே வைத்;திருப்பார்கள் போல. ரஜினிகாந்த், ராதா, நதியா, ஜனகராஜ், ராதாரவி, ஆனந்தராஜ், வினுசக்கரவர்த்தி, விஜயகுமார் என நட்சத்திர பட்டாளங்களோடு படம் களமிறங்கியது. 

அக்காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப்பார்ப்பது ரஜினி படங்கள் தான். அவருடைய ஸ்டைலே அத்தனை பேரையும் சுண்டியிழுத்து திரையரங்கிற்கு ஓடோடி வரவழைத்துவிடும். வெள்ளிவிழா கொண்டாடிய இப்படம் இப்போது பார்த்தாலும் கொஞ்சம்கூட சலிக்காது.  

ஆர்.டி.பாஸ்கரின் தயாரிப்பில் உருவான படம் சரியான மசாலா கதைதான். ரஜினிக்கு இரட்டைவேடம். வெளிநாட்டில் இருந்து எஸ்டேட் திரும்பும் ராஜா, தனது தந்தையின் மரணம் பற்றி அறிந்து அதிர்ச்சி அடைகிறார். தனது நண்பனை தனக்குப் பதிலாக எஸ்டேட்டுக்கு அனுப்பி வைக்கிறார். இதையறிந்த சதிகாரர்கள், அந்த நண்பனைக் கொன்று பழியை ராஜா மீது போடுகிறார்கள். 

Rajadhi raja

சிறை செல்லும் ராஜா அங்கிருந்து தப்பிக்கிறார். வழியில் தன்னைப்போலவே உருவ ஒற்றுமை உள்ள அப்பாவியைப் பார்க்கிறார். தான் உண்மையான சதிகாரர்களைக் கண்டறியும் வரை தனக்குப் பதிலாக அவரை சிறை செல்லுமாறு கேட்கிறார். பணத்தேவைக்காக அந்த அப்பாவியும் அதற்கு ஒப்புக்கொள்கிறார்;. ராஜா சதிகாரர்களைக் கண்டறிந்தாரா என்பதை மீதி கதை சொல்கிறது.
 
சூப்பர்ஸ்டாருக்கு உள்ள அத்தனை தகுதியும் படத்தில் ரஜினி கச்சிதமாக செய்துள்ளார். 'ஆய்...ஆ...ய் என கத்துவதாகட்டும்...ஆய் உட்டாலங்கடி கிரிகிரி" என கலாய்ப்பதாகட்டும.; அவருக்கு நிகர் அவரே. கதாநாயகன் படம் முழுவதையும் ஆக்கிரமித்து விட்டால் மற்ற நட்சத்திரங்கள் முன் அவரே சூப்பர்ஸ்டாராகத் தெரிவார்.  அதனால் அவரை மட்டுமே இப்போதும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Rajadhi raja

எனக்கு கட்சியும் வேணாம்...ஒரு கொடியும் வேணாம் என்று அப்போதே அரசியல் எனக்கு தேவையில்லை என்று சொல்லியிருப்பார். 
மனுஷன் யாரை எப்படி அடிக்கிறார் என்றே தெரியவில்லை. கையாலா, காலாலா என பார்ப்பதற்குள் சண்டைக்காட்சி முடிந்து விடுகிறது. அவ்வளவு ஸ்பீடு...! அதுவும் அவருக்கென்றே வடிவமைக்கப்பட்ட ஸ்டெப் டான்;ஸ் செம மாஸ்...

Rajadhi raja

மலையாளக் கரையோரம் கவிபாடும் குயிலு... என பாடி ஆடி ஓடி வருவது ரஜினிக்கு ஓபனிங் சாங். 'எங்கிட்ட மோதாதே...நான் ராஜாதிராஜனடா...வம்புக்கு இழுக்காதே...நான் சூராதிசூரனடா..., மாமா ஒன் பொண்ணைக் கொடு....மீனம்மா...மீனம்மா கண்கள் மீனம்மா..., வா...வா...மஞ்சள் மலரே..." பாடல்கள் ராகதேவன் இன்னிசையில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகங்கள்.         
;

From around the web

Trending Videos

Tamilnadu News