×

3 பெக்க விட வேலு நாயக்கர் போதை அதிகம் - நாயகன் பார்த்து கமலுக்கு போன் போட்ட ரஜினி

 
nayagan

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987ம் ஆண்டு வெளியான ‘நாயகன்’ திரைப்படம் தமிழ் சினிமாவின் மைல்கல் என்று சொன்னால் யாரும் மறுக்கமாட்டார்கள். தமிழ் சினிமாவின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் ‘நாயகன்’ திரைப்படம் எப்போதும் இடம் பெற்றிருக்கும். ஏன் இந்திய சினிமா வரலாற்றிலும் நாயகனுக்கு அந்த இடம் உண்டு.

மௌனராகம் எனும் அழகிய காதல் கதையை கொடுத்து இந்திய சினிமாவை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் மணிரத்னம் அடுத்து இயக்கிய திரைப்படம்தான் ‘நாயகன்’. சிறு வயதில் மும்பைக்கு சென்று, கடத்தல் வேலைகளை செய்து மக்களுக்கு சேவை செய்யும் டானாக மாறிய வேலு நாயக்கர் என்பவரின் வாழ்க்கை கதையை மணிரத்னம் படமாக்கியிருந்தார்.

அந்த கதையை மணிரத்னம் சொல்லிய விதம், கமல்ஹாசனின் சிறப்பான நடிப்பு, பி.சி.ஸ்ரீராமின் அழகிய ஒளிப்பதிவு, இசைஞானி இளையராஜாவின் அசத்தலான இசை என நாயகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா தனது புதிய உச்சத்தை தொட்டது. இப்படத்தை பார்த்த பின்பே பலருக்கும் இயக்குனராகும் ஆசை வந்தது. 

இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் எப்படி ரியாக்ட் செய்தார் என்பது தற்போது தெரியவந்துள்ளது. டூரிங் டாக்கீஸ் யுடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் பி.வாசு இந்த தகவலை பகிர்ந்துள்ளார். நாயகன் படத்தை பார்த்ததும் ரஜினி வாயடைத்துப் போனாராம். 

rajini

என்ன ஒரு மேக்கிங், என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு திரைக்கதை என பூரித்துப் போன ரஜினி வீட்டிற்கு சென்றவுடன் ஒரு கிளாஸ் பெக்கை போட்டாராம். மீண்டும் மீண்டும் நாயகன் பாதிப்பு அவரை தூண்ட அடுத்த பெக், உடனே அடுத்த பெக் என 3 ரவுண்டு போட்டாராம். 

உடனே கமல்ஹாசனை தொலைப்பேசியில் அழைத்த ரஜினி ‘கமல்.. மூணு பெக்கை விட வேலு நாயக்கர் போதை  அதிகமா இருக்கு’ என சொன்னாராம். 

தமிழ் சினிமாவில் போட்டி என்பதை தாண்டி பல வருடங்களாகவே ரஜினியும், கமலும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News