×

ஆளை வுடுங்கடா!.. அண்ணாத்த ஷூட்டிங் முடித்து சென்னை திரும்பும் ரஜினி.....

 
rajini

விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்க கடந்த வருடமே துவங்கிய திரைப்படம் அண்ணாத்த. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தம், படப்பிடிப்பு குழுவினர் சிலருக்கு கொரோனா, ரஜினிக்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு என பல காரணங்களால் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் டிசம்பர் மாதம் நிறுத்தப்பட்டது.

அதன்பின் 3 மாத ஓய்விற்கு பின் ரஜினி எப்படியாவது படத்தை வேகமாக முடித்து கொடுப்போம் என கங்கணம் கட்டி ஹைதராபாத் கிளம்பி சென்றார். படப்பிடிப்பை விறுவிறுவென நடத்தி இறுதிக்கட்டத்திற்கு இயக்குனர் சிவா கொண்டுவந்துவிட்டார். 3 பாடல்கள் மற்றும் படப்பிடிப்பு காட்சிகள் முடிந்துவிட்டது. 

இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டும் எடுக்க வேண்டியுள்ளதாம். எனவே, மே 10ம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு முடிந்துவிடும் என நம்பப்படுகிறது. ஒரு பாடலை வெளிநாட்டில் எடுக்க சிவா ஆசைப்படுகிறார்.எனவே, இன்னும் ஓரிருநாளில் ரஜினி தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பவுள்ளனராம். எனவே, இந்த திரைப்படம் திட்டமிட்டபடி வருகிற தீபாவளியன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News