×

ராகவா லாரன்ஸுக்கு 100 மூட்டை அரிசி அனுப்பிய ரஜினி....

நடிகர் ராகவா லாரன்ஸ் எப்போதும் எல்லோருக்கும் உதவும் மனம் படைத்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கு  நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே  ரூ.4 கோடியை பலருக்கும் வழங்கியுள்ளார்.  அதன்பின்னரும் அது போதாது என கருதி, ஒரு குழு அமைத்து பலரிடம் உதவி மற்றும் நிவாரண பொருட்களை பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் ரஜினி தனக்கு 100 மூட்டை அரிசிகளை வழங்கியுள்ளார். இந்த தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். மேலும்  ‘முதல் கட்டமாக தலைவர் சூப்பர் ஸ்டார் அவர்களிடம் நேற்று நான் உதவி கேட்டபோது அவர் உடனடியாக நூறு மூட்டை அரிசியை அனுப்பி வைத்தார். 

இன்று ஏழை எளியவர்களுக்கு அந்த அரிசி வினியோகம் செய்யப்பட உள்ளது. அதேபோல் ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, ஆகியோர்களின் ரசிகர்களிடமும் அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களிடமும் உதவியை கேட்டு இருக்கின்றேன். உங்களால் முடிந்த அளவு நீங்கள் பணமாகவோ பொருளாகவோ உதவி செய்தால் அவற்றை ஏழை எளிய மக்களுக்கு என்னால் வினியோகம் செய்ய முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News