×

ரஜினி சார்.. நல்ல முடிவா எடுங்க...ஹெல்த் ரொம்ப முக்கியம்.. குஷ்பு உருக்கம்...

 

ரஜினி அரசியலுக்கு வராமலேயே அரசியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அவர் மன்ற நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதம் ஒன்று வெளியானது. ஆனால், அது தன்னுடைய அறிக்கை இல்லை எனவும், அதேநேரம் அதில் தனது உடல்நிலை குறித்த தகவல்கள் உண்மை எனவும், மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிப்பேன் எனவும் ரஜினி விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை குஷ்பு தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ரஜி சார். உங்களின் மகிழ்ச்சி மற்றும் உடல்நிலையை விட முக்கியமானது வேறு எதுவும் இல்லை. உங்களுக்கு எது சிறந்தது என கருதுகிறீர்களா அதை செய்யுங்கள். எதுவாக இருந்தாலும் உங்கள் மேல் எங்களுக்கு உள்ள அன்பு உயிருள்ளவரை மாறாது’ என பதிவிட்டுள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News