அண்ணாமலை கட்சியில் இணையும் ரஜினியின் குடும்ப உறுப்பினர்!.. விஜய்க்கு செக்கா!..
1996ம் வருடம் பாட்ஷா பட வெற்றி விழாவில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தார் நடிகர் ரஜினி. இதையடுத்து அவர் அரசியலுக்கு வருவார் என மக்கள் எதிர்பார்த்தார்கள். அவரின் ரசிகர்களும் மிகுந்த நம்பிக்கையோடு காத்திருந்தார்கள்.
ஆனால் ரஜினியோ ‘தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என சொல்லியே 25 வருடங்களை ஓட்டினார். திரைப்படங்களில் அரசியல் வசனம் மற்றும் காட்சிகளை வைத்தாரே தவிர அவர் அரசியலுக்கு வரவில்லை. அதன்பின் ஒருநாள் ‘நான் அரசியலுக்கு வருகிறேன்.. நமது கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்’ என அறிவித்தார். ஆனால் சில மாதங்களிலேயே தனது உடல் நிலையை காரணம் காட்டி அரசியல் கட்சி துவங்குவதிலிருந்து விலகினார்.
தற்போது விஜய் அரசியல் கட்சி துவங்கி தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் மாறிவிட்டார். சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் பேசிய ரஜினி ‘நானும் கட்சியா ஆரம்பித்திருந்தால் கண்டிப்பாக 100 சதவீதம் வெற்றி பெற்றிருப்பேன்’ என்று கூறினார். இந்நிலையில்தான் ரஜினியின் மருமகன் அதாவது ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் கணவர் விசாகன் அண்ணாமலை துவங்கியுள்ள இயக்கத்தில் இணையவிருக்கிறாராம். ரஜினியின் மருமகளே அண்ணாமலையின் இயக்கத்தில் இணைவது விஜய்க்கு வைக்கப்படும் செக்காகவே பார்க்கப்படுகிறது.
