×

ரஜினி பேச்சால் அதிர்ச்சி... ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி மாரடைப்பில் மரணம்
 

திருச்சி மணப்பாறையில் வசித்து வருபவர் பாபா முருகேஷ். ரஜினியின் தீவிர ரசிகரான இவா் மணப்பாறை நகர ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளராக உள்ளார். அவருக்கு லதா என்ற மனைவியும், தினேஷ் என்ற மகனும் உள்ளனா். 
 

நேற்று ஒரு சிறிய விபத்தில் சிக்கி அவர் காயமடைந்தார். எனவே, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினி தனக்கு முதல்வர் பதவியில் ஆசை இல்லை என்பது உள்ளிட்ட பல அதிரடி கருத்துகளை கூறினார். ரஜினியின் இந்த பேச்சுகளை செல்போனில் பார்த்துக்கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News