ரஜினி.. ஸ்டாலின்.. பழனிச்சாமி!.. அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கிளிக்ஸ்!..

 
rajini stalin


தமிழ் சினிமாவில் முக்கிய இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். தற்போது பெரிய படங்களுக்கு இவர்தான் இசையமைத்து வருகிறார். முன்னாள் நடிகர் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர் விஜயின் பல படங்களுக்கு இசையமைத்தார்.

தற்போது ரஜினி, கமல், அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரின் படங்களுக்கும் அனிருத்தான் இசை. ஒருபக்கம், சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் மகள் காவ்யாவுக்கும், அனிருத்துக்கும் கடந்த 11ம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்டனர்..

இந்நிலையில்தான் இன்று சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் அனிருத் - காவ்யா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பல சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தி வருகிறார்கள். முதலமைச்சர் ஜோசப் விஜயும் அங்கு சென்றுள்ளனர்.

rajini stalin

ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் அங்கே சென்றனர். அதேபோல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், முக ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றாக ஓரிடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

Murugan ..
Murugan ..

5188 Articles

Murugan Manickam is an experienced digital journalist with 10 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news. Con tact: mugas123@gmail.com

Tags

From Around the web