×

ரஜினி பற்றி பேச அக்கவுண்ட்டில் ரூ.5 லட்சம் போடுங்க – சரத்குமார் கலகல !

நடிகர் சரத்குமார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

 

நடிகர் சரத்குமார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சரத்குமார் தற்போது தெலுங்கு படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அதனோடு தனது கட்சி செயல்பாடுகளைக் கவனித்து வருகிறார். தேனி மாவட்டத்தில் தனது கட்சிக்காரர் ஒருவரின் திருமணத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘குடியுரிமைத் திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பு இல்லை. அப்படி யாராவது பாதிக்கப்பட்டால், களத்தில் இறங்கி போராட தயாராக உள்ளேன்.’ எனக் கூறினார். அப்போது ரஜினியின் அரசியல் குறித்துக் கேட்கப்பட்டபோது ‘யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். அவர் குறித்துப் பேச வேண்டுமானால் அக்கவுண்ட்டில் 5 லட்சம் ரூபாய் போடுங்கள்’ என சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News