
Cinema News
Rajini: தொடர்ந்து சர்ச்சை பேச்சு! மாட்டிக்கிட்டு முழிக்கும் ரஜினி.. இதெல்லாம் தேவையா?
Rajini: நேற்று அரசு சார்பில் இளையராஜாவுக்கு ஒரு பெரிய விழா எடுத்து அவரை பெருமை படுத்தினார்கள். ஒரு பக்கம் லண்டனில் சிம்பொனி இசையை நடத்தி வெற்றிகண்டதற்காகவும் இன்னொரு பக்கம் இந்த திரைத்துறையில் நுழைந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காகவும் அவர்க்காக பொன் விழா ஆண்டை நடத்த அரசு திட்டமிட்டு நேற்று நடத்தினார்கள். அந்த விழாவிற்கு கமல், ரஜினி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
அது போக திரையுலகை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். அப்போது 70களில் நடந்த பல விஷயங்கள் நேற்று மேடையில் பேசி நியாபகப்படுத்திக் கொண்டார்கள். அதில் ரஜினி பேசியதுதான் பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது.
30 வருஷத்துக்கு முன்பே இளையராஜாவுக்கும் ரஜினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. ஒரு விழாவின் போது ரஜினி பேசுகையில் வெயில்லையும் மழையிலயும் நாங்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம்ல் ஆனால் இளையராஜா ஏசி ரூம்ல உட்கார்ந்துகிட்டு சம்பாதிக்கிறார் என்ற வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சு அன்றைய தேதியில் பெரிய விவாத பொருளாக மாறியது.
இதைப் பற்றி பத்திரிகைகளிலும் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ஒரு ஹீரோவின் சம்பளம் என்பது இசையமைப்பாளரின் சம்பளத்துடன் ஒப்பிடும்பொழுது பெரிய மடங்கு என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் ரஜினி இந்த அளவு கம்பேர் செய்திருக்கக் கூடாது என்றும் அப்படி ஆர்வமாக இருந்தால் ரஜினிகாந்தே இசை அமைக்க செல்லலாமே என்றும் கிண்டலாக எழுதியிருந்தார்கள்.
அதுமட்டுமல்ல சமீபத்தில் கூட துரைமுருகனை பற்றி அவர் மேடையில் கிண்டலாக பேசியது பேசுபொருளாக மாறியது. அதோடு விவேக் பற்றி ஒருமுறை ரஜினி பேசும்பொழுது இந்த அளவு அறிவாக பேசுகிறாரே இவர் பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என முதலில் நான் நினைத்தேன். அதன் பிறகு தான் தெரிந்தது இவர் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்தவர் என்று என மேடையில் ஓப்பனாக பேசினார். ஆனால் அந்த சமயத்தில் இந்த விஷயத்தை விவாதமாக ஆக்காமல் விட்டு விட்டார்கள்.

நேற்று கூட, ரஜினி பேசிய பல விஷயங்கள் அந்த மேடைக்கு தேவையில்லாதவை தான். ஒரு அரசு, பெரிய சாதனை செய்த கலைஞனுக்கு எடுக்கும் விழாவில், அவருடைய கலைத்திறன் அவருடைய பண்புகள் அவற்றை மட்டும் சொல்லி வாழ்த்தி இருக்கலாம்.
அதை விட்டு நாங்க ஒன்னா குடிச்சோம். அரை பீர் குடிச்சு இவர் போட்ட ஆட்டம் இருக்கே என பல ஜாம்பவான்கள் கூடியிருந்த மேடையில் ரஜினி பேசியது தேவையில்லாதவை. இளையராஜா செய்தது மிகப்பெரிய சாதனை. அதை ஒரே ஒரு பீர் பாட்டிலை வைத்து டோட்டலாக காலி பண்ணி விட்டார் ரஜினி என அவர் மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது.