Connect with us
ajith

Cinema News

ரஜினி-விஜய் போட்டியால் தனிமைப்படுத்தப்பட்ட அஜித் – கெத்தை காட்ட அந்த முயற்சியில் இறங்கப் போகும் தல

சமீபகாலமாக சினிமாவில் யாரும் எதிர்பாராத சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. காலங்காலமாக பின்பற்றி வந்த ரஜினி – கமல் போட்டி மறைந்து ரஜினி – விஜய் போட்டியாக மாறிவருகின்றது. 90களுக்கு பிறகு ரஜினி கமல் இவர்களுக்கு அடுத்து இன்று வரை ஒரு பலமான போட்டியாக உருவெடுத்தவர்கள்தான் அஜித்-விஜய்.

ஆனால் அது இப்போது ரஜினி – விஜயாக மாறியிருக்கின்றது. இதை பற்றி வலைப்பேச்சு அந்தனன் ஒரு பேட்டியில் விளக்கமாக கூறியிருக்கிறார். அதாவது அஜித் முன்பு மாதிரி இல்லை என்றும் அவர் ஒரு பக்குவத்திற்கு வந்துவிட்டார் என்றும் ஏன் இப்படி போட்டி போட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை போன்று தனிமையை விரும்புகிறார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க : பாக்ஸ் ஆபிஸ் கிங் நான்தான்!.. சைலைண்டா நிரூபித்த ரஜினி!… ஜெயிலர் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?!…

அஜித் இப்படி இருக்கலாம். ஆனால் அவரை சார்ந்த ரசிகர்கள் பரிதவித்துக் கொண்டு வருகிறார்கள். இதைப் பற்றி சமீபகாலமாக அஜித்தை சுற்றி இருக்கிறவர்கள் ரசிகர்களுக்காகவாவது ஒரு ஆடியோ லாஞ்ச் வைக்க வேண்டும் என பரிந்துரை செய்து வருகின்றார்கள்.

கூடிய சீக்கிரம் அஜித் படத்திற்கு ஆடியோ லாஞ்ச் வரும் என அந்தனன் கூறினார். ஆனால் அஜித் இப்படி இருக்கிறதுக்கு காரணமே முன்பு இருந்த ஒரு கோபம்தான் என்றும் அந்தனன் கூறினார். அதாவது கலைஞருக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் அஜித் பேசிய பேச்சு அனைவருக்கும் தெரியும்.அதற்காக எழுந்து நின்று ரஜினியும் கைதட்டியது அனைவருக்கும் தெரியும்.

இதன் காரணமாக சில பேர் அஜித்தை மிரட்டினார்கள், வீட்டை முற்றுகையிட்டார்கள். ஆனால் யாருக்காக அஜித் அப்படி பேசினாரோ அவர்கள் தரப்பில் இருந்து ஒரு ஆறுதலான வார்த்தை கூட அஜித்தை சென்றடையவில்லை. அதாவது ஒட்டுமொத்த சினிமாவுக்காகத்தான் அஜித் பேசினார்.

இதையும் படிங்க : சூப்பர்ஸ்டார் ரஜினியா? விஜயா?… நெல்சன் சொன்ன அடடே பதில்.. பொழைச்சிக்குவ ராசா!

ஆனால் அந்த சினிமாவில் இருந்து உங்களுக்காக நாங்க இருக்கோம் என ஒருத்தர் கூட வரவில்லை. ஆனால் ரஜினிதான் இரவோடு இரவாக அஜித்தை அழைத்துக் கொண்டு போய் அன்றே கலைஞர் வீட்டுக்கு சென்று மன்னிப்பு கேட்கவைத்தார். அதோடு அந்த பிரச்சினை மறைந்தது. ஆனால் அஜித்துக்கு அந்த கோபம் இன்று வரை மறையவில்லை.

எனக்காக அன்று யார் நின்றார்கள், அப்படி இருக்கும் போது யாரும் எப்படியும் போகட்டும், நம் வேலை நடிப்பது மட்டுமே, அதை சரியாக செய்வது நம் கடமை என்று இருந்து கொண்டு வருகிறார் அஜித் என அந்தனன் கூறினார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top