×

அந்த நடிகைதான் வேண்டும்!.. பாதி வயசு குறைந்த நடிகையுடன் டூயட் பாட விரும்பும் ரஜினி......

 
rajini

ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிறுத்தை, வேதாளம், வீரம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு 4 நாட்கள் கொல்கத்தாவில் நடைபெறுவதாகவும், ரஜினி கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அது மாற்றம் செய்யப்பட்டு சென்னையிலேயே படப்பிடிப்பு நடந்து வருகிறது.

annathe

அண்ணாத்த படத்திற்கு பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

deepika

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகை தீபா படுகோனேவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். தீபிகா படுகோனே ஏற்கனவே ரஜினி பற்றி அனிமேஷன் படமான ‘கோச்சடையன்’ படத்தில் சில காட்சிகள் நடித்தார். அதேபோல், ரஜினி நடிப்பில் துவங்கிய ‘ராணா’ படத்திலும் அவர் நடிக்கவிருந்தார். ஆனால், அப்படம் துவங்கிய போது ரஜினியின் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அப்படம் டிராப் ஆனது.எனவே, இந்த முறை அவரை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என ரஜினி ஆசைப்படுகிறாராம். 

ரஜினியின் வயது 70. தீபிகா படுகோனின் வயசு 35. எனவே, தன்னை விட பாதி வயசு குறைந்த நடிகையுடன் டூயட் பாட ரஜினி ஆசைப்படுவது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News