×

கமல் - லோகேஷ் கனகராஜ் படத்தை டீலில் விட்ட ரஜினி - ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் ரஜினி தற்போது தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தே திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.
 

இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போதே அவரின் தீவிர ரசிகர், நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் கூறிய கதை பிடித்துப்போய் விட அதில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். அதேபோல், ரவிக்குமார் மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோரின் படங்களில் தொடர்ந்து நடிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.  

இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும் ரஜினி கூறிய எழுச்சி இங்கே ஏற்பட வாய்பில்லை என்பதால் ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பார் எனத் தெரிகிறது.

இதிலிருந்து, அண்ணாத்தே திரைப்படத்திற்கு பின் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என வெளியான செய்தி உண்மையா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. அல்லது அதை ரஜினி விரும்பாமல் விலகியிருக்கலாம் எனவும் செய்திகள் கசிந்துள்ளது. 

அது என்னவோ ரஜினிக்கே வெளிச்சம்!

From around the web

Trending Videos

Tamilnadu News