சீக்கிரமா சந்திப்போம்..ஆர்.ஜே.பாலாஜியிடம் கூறிய ரஜினி
சூர்யா நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான படம் கருப்பு. தொடர்ந்து 13 ஆண்டுகளாக தோல்விகளை கொடுத்து வந்த சூர்யாவுக்கு நினைத்து பார்க்க முடியாதெ வெற்றியை கொடுத்துள்ளது இந்த படம். உலகம் முழுவதும் சுமார் 270 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்து பல திரையரங்குகளில் கூட்டம் குறையாமல் உள்ளது. இப்படத்தின் இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி படத்தின் வெற்றியை பல ஊர்களுக்கு சென்று ரசிகர்களுடன் கொண்டாடி வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நல்ல படங்கள் வந்தால் உடனடியாக அப்படகுழுவை சந்தித்து பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் கருப்பு படத்தினை பார்த்த ரஜினிகாந்த் ஆர்.ஜே.பாலாஜிக்கு திடீரென போனில் அழைத்து பேசியுள்ளார். அப்போது, பாலாஜி சூப்பர், சூப்பர், சூப்பர். சாதிச்சிட்டீங்க எவ்வளவு பெரிய ஹிட்; சீக்கிரமே சந்திப்போம் என்று கூறினாராம்.
இந்த சம்பவத்தை பற்றிய கூறிய ஆர்.ஜே.பாலாஜி, நம் படத்தை பார்த்து ரஜினிகாந்த் சாரிடமிருந்து ஒரு போன் வராதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். திடீரென அவர் அழைத்ததும் என் வாழ்க்கையில் இன்னொரு பாக்ஸ் டிக் அடித்த மாதிரி இருந்தது என்றார்.
