Categories: Cinema News latest news

தன்னை கண்டபடி திட்டிய டாப் நடிகைக்கு வாய்ப்பு வழங்கிய ரஜினிகாந்த்… இப்படி ஒரு பெருந்தன்மையா??

1996 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ரஜினிகாந்த், ஜெயலலிதாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். “ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது” என ஒரு பத்திரிக்கையாளர் பேட்டியில் கூறியிருந்தார் ரஜினிகாந்த்.

Jayalalithaa

ஒரு முறை ஜெயலலிதா பங்குபெற்ற மேடையில் அவர் முன்பாகவே அவரை விமர்சித்து பேசினார் ரஜினிகாந்த். குறிப்பாக “படையப்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற நீலாம்பரி என்ற கதாப்பாத்திரம், ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கிய கதாப்பாத்திரம்தான் என ஒரு பேட்டியில் அத்திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு முறை கூறியிருந்தார்.

Manorama

1996 ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் மனோரமா ஜெயலலிதாவுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தார். ஆதலால் ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த ரஜினிகாந்த்தை பலமுறை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார் மனோரமா.

ரஜினிகாந்த்தை விமர்சித்து பேசிய நிலையில் அதனை தொடர்ந்து மனோரமாவுக்கு சினிமாவில் வாய்ப்புகளே வரவில்லையாம். கிட்டத்தட்ட சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தாராம் மனோரமா.

இதையும் படிங்க: கொலை வழக்கில் சிக்கிய நாகேஷ்!.. உதவி செய்ய மறுத்த மனோரமா… இப்படியெல்லாம் நடந்திருக்கா??

Rajinikanth

எனினும் 1997 ஆம் ஆண்டு வெளியான “அருணாச்சலம்” திரைப்படத்தின் மூலம்  ரஜினிகாந்த், மனோரமாவை மீண்டும் சினிமாவுக்குள் அழைத்து வந்தாராம். படப்பிடிப்புத் தளத்தில் ரஜினிகாந்த்தின் முகத்தை பார்க்கவே சங்கடப்பட்டாராம் மனோரமா. ஆனாலும் மனோரமா தன்னை பற்றி விமர்சித்ததை எதுவும் மனதில் வைத்துக்கொள்ளாமல் மனோரமாவிடம் மிகுந்த மரியாதையுடனும் அன்போடும் நடந்துகொண்டாராம் ரஜினிகாந்த்.

Arun Prasad
Published by
Arun Prasad